உணவே மருந்து

மாதவிடாய் காலங்களில் உண்டாகும் தீராத வயிற்றுவலியைப் போக்கும் அருமருந்து!

தினமணி

மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தீராத வயிற்று வலியினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கசாயத்தைக் குடித்து வந்தால் வயிற்று வலி உடனடியாக குணமாகும்.

தேவையான பொருட்கள்

சோம்பு.        -  3  தேக்கரண்டி

நெய்.           -   அரை ஸ்பூன்

பனங்கற்கண்டு   -  சிறிதளவு
                                          
செய்முறை

ஒரு பாத்திரத்தில் சோம்பை போட்டு அது லேசாகக் கருக ஆரம்பிக்கும் வரை வறுக்க வேண்டும். கொஞ்சம் வறுத்ததும் அதில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

நீர் நன்றாகக் கொதித்து முக்கால் டம்ளர் அளவாகச் சுண்ட வைத்து  அதனை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய சோம்புத்தண்ணீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கி பொருக்கும் சூட்டில் குடிக்கவும்.

தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்கள்

இந்தக் கசாயம் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தீராத வயிற்று வலியினால் அவதிப்படுபவர்கள் செய்து குடித்து வந்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT