pregnant woman 
மகப்பேறு மருத்துவம்

குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்ப பையில் உள்ள கசடுகளை வெளியேற்ற உதவும் கஞ்சி

திணை அரிசியை வெறும் வாணலியில் வறுத்து  பின்பு அதனை நீரில் ஊற வைக்கவும்.

கோவை பாலா

முருங்கை விதை திணை அரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

முருங்கை விதை பவுடர் - 10  கிராம்
திணை அரிசி - 100 கிராம்
பாசிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய்த் துருவல் - சிறிதளவு

செய்முறை

  • முற்றின முருங்கை விதையை பவுடராக்கிக் கொள்ளவும்.
  • திணை அரிசியை வெறும் வாணலியில் வறுத்து பின்பு அதனை நீரில் ஊற வைக்கவும்.
  • அதே போல் பாசிப் பருப்பையும் லேசாக வறுத்து பின்பு நீரில் ஊற வைக்கவும்.
  • பின்பு திணை அரிசி மற்றும் பாசிப் பருப்பு இரண்டையும் களைந்து கழுவி ஓரு பாத்திரத்தில் போட்டு  அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி  வேக வைக்கவும்.
  • நன்கு வெந்து கஞ்சியாக வந்தவுடன் அதனை இறக்கி வைத்து அதில் முருங்கை விதைப் பவடர் மற்றும் தேங்காய்த் துருவலை  சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

  • குழந்தை பெற்ற பெண்களுக்கு  கர்ப்பபையில்  உள்ள கசடுகளை வெளியேற்ற இந்தக் கஞ்சியை தினமும் பிரசவித்த பின்பு ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT