விஐபி ஹெல்த்

அழகுப் புயல் தீபிகா படுகோன்

தினமணி

பாலிவுட் ராணி என்று புகழாரம் சூட்டப்பட்ட நம் தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவியின் மனம் கவர்ந்த நாயகி தீபிகா படுகோன். பாலிவுட்டின் அழகுப் புயலான இவர், தன் அழகு மற்றும் ஆரோக்கிய ரகசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

நீங்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுகள் என்ன என்ன?

என்னுடைய டயட்டீஷியன் பரிந்துரைப்படி சமச்சீரான உணவு பழக்கத்தை கடைபிடிக்கிறேன். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை சின்னதாக  ஏதாவது ஒரு சத்தான உணவைச் சாப்பிடுவேன். அது எனக்கு எனர்ஜி தருகிறது. நிறைய தண்ணீர் குடிப்பேன். பளபளப்பான சருமத்துக்கு அது மிகவும் நல்லது. சமச்சீரான உணவும், தேவையான அளவுக்கு நல்ல‌ தூக்கமும் கூட அழகுக்கு அத்யாவசியமான விஷயங்கள்.

உங்கள் கூந்தல் அழகை எப்படி பராமரிக்கிறீர்கள்?

ஷூட்டிங் சமயத்தில் அதிகளவு வெளிச்சம் மற்றும் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்படுவது தலைமுடி தான். ஒவ்வொரு படத்திலும் ஹேர் ஸ்டைல் விதவிதமாகச் செய்ய வேண்டியிருக்கும். அதனால் ஹீட்டிங், பெர்மிங் என்று தலைமுடிக்கு அதிக ஸ்ட்ரெஸ் ஏற்படும். தலை சூடாகிவிட்டால், முகத்தின் பொலிவு பாதிக்கப்படும், ஆரோக்கியமும் கெடும். எனவே முதலில் தலைமுடிக்கு  தனிக்கவனம் எடுத்தே ஆக வேண்டும். நான் மூன்று விஷயத்தை மறக்காமல் கடைப்பிடிப்பேன். ஷூட்டிங் முடிந்து வந்ததும் தலைமுடியை லூஸ் ஹேர் விட்டு சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்து கொள்வேன், அதன்பின் ஆயில் மசாஜ் பண்ணுவேன். மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி தலை குளித்ததும் புத்துணர்ச்சி ஏற்படும். தலையில் இருக்கும்  பாரம் எல்லாம் எல்லாம் விடுபட்டது போல‌ உணர்வேன். 

தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது டீ ட்ரீ அரோமா ஆயிலால் முடியை நன்றாக ஊற வைத்து மசாஜ் செய்வேன். எவ்வளவுக்கு எவ்வளவு தலைமுடிக்கு சத்தும் ஊட்டமும் தருகிறோமோ அந்த அளவுக்கு அது பளபளப்பாகவும் அடர்த்தியாவும் இருக்கும்.

உங்க தோற்றப் பொலிவுக்கு என்ன செய்யறீங்க?

ஒருவரின் பழக்க வழங்கங்கள், வாழ்க்கை முறை இவற்றை வைத்து அவர்களின் சருமத்தை வகைப்படுத்திவிடலாம். ஆரோக்கியமான சருமம் இருந்தால் அவர் தன்னுடைய சரும பராமரிப்பில் அக்கறை உள்ளவர் என்று அர்த்தம். எது  தனக்கு ஏற்றது, எந்த பொருள் தன்னுடைய தோலுக்கு ஏற்றது, எது தரமானது என்ற தெளிவு பெண்களுக்குத் தேவை. சந்தையி ல்கிடைக்கும் பொருட்களை வாங்கி பணத்தை மட்டுமல்லாமல் அழகையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது. என்னைப் பொருத்தவரை தினமும் moisturiser உள்ள க்ரீமைத் தடவுவேன். அதன்பின் படத்துக்குத் தேவையான மேக் அப் போட்டுக் கொள்வேன். இரவு தூங்குவதற்கு முன்னால் சின்ன மேக் அப்பால இருந்தால் கூட அதை முற்றிலும் சுத்தப்படுத்தி மறுபடியும் மென்மையான ஒரு மாய்ஸ்ரைஸர் க்ரீமைத் தடவிய பின்னர் தான் தூங்குவேன். 

கடவுள் கொடுத்த வரம் அழகு. இளமை  சினிமா இவை மிக குறுகிய காலம் வரை தான். ஜெயிக்கறது முக்கியம் தான் ஆனால் அதைவிட வாழ்வது முக்கியம். சந்தோஷமாக இருப்பதும், நம்மைச் சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷப்படுத்த முடியாது போனாலும் சங்கடப்படுத்தக் கூடாது. நம்முடைய வேலையை நாம் கவனமாகச் செய்யவேண்டும். உங்களை முழுமையாக நம்புங்கள். ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கை தான் பேரழகு!. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT