முகப்பு
யோகா

உங்கள் சருமம் சுருக்கம் அடையாமல் இருக்க இதுதான் ஒரே வழி!

வயதாகிவிட்டதன் முதல் அறிகுறி தலைமுடி நரைக்கத் தொடங்கும், உடல் சற்று தளர்ச்சி அடையும்

Updated On : 17 ஜூன், 2019 at 3:28 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:46 PM

வயதாகிவிட்டதன் முதல் அறிகுறி தலைமுடி நரைக்கத் தொடங்கும், உடல் சற்று தளர்ச்சி அடையும், கை கால் அல்லது முதுகு வலி, உடல் சோர்வு போன்றவை ஆகும். இதையெல்லாம் விட அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் ஒன்று உண்டு, அது சருமம் பொலிவிழந்து சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும். 

சிலருக்கு சுருக்கம் சற்று முன்னதாகவே ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை எனலாம். புகைபிடித்தல், ஆல்கஹால், போதைப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுகள் உள்ளிட்ட சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை. முகப்பரு மற்றொரு பொதுவான சருமப் பிரச்னை. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இது சில நேரங்களில் ஏற்படக்கூடும் மற்றும் முறையற்ற செரிமானமும் முகப்பரு வடிவத்தில் தோன்றும். காரணம் எதுவாக இருந்தாலும், இந்த யோகா ஆசனங்கள் சருமத்தை மென்மையாக்கி பளபளப்பாக உதவும். முயற்சித்துப் பாருங்கள்!

முகத்தில் உள்ள தோல் இறுக்கம் அடைய வைக்க சில பயற்சிகள்!

Advertisement

கீழே குறிப்பிடப்பட்ட ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் தலை மற்றும் முகப் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இயற்கையாகவே சருமத்தை அழகாக்கி ஜொலி ஜொலிக்க வைக்கும். இத்தகைய ஆசனங்களால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்டம் செல்லும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும், மேலும் தொடர்ந்து இந்த ஆசனங்களை செய்து வர, உடல் ஆற்றல் பன்மடங்கு உயரும். தகுந்த யோகா நிபுணர்களின் துணையுடன் இதனை கற்றுத் தேர்ந்த பின்னரே தினசரி செய்யத் தொடங்க வேண்டும். 

புஜங்காசனம் 

இந்த ஆசனம் முதுகு மற்றும் தோள்களில் விறைப்பைக் குறைக்கிறது, மனநிலையை நிதானமாக உயர்த்துகிறது, மேலும் சருமத்தை மென்மையாக்குகிறது.

சருமத்தை பளிச்சென்று ஆக்கும் யோகா

மத்ஸ்யாசனம்

இந்த ஆசனம் ஆழமான சுவாசத்தை செயல்படுத்துகிறது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வை இயல்பாக்க உதவுகிறது மற்றும் தசைகளை தளர்த்தும். இது சருமத்தை மேலும் நெகிழ்வானதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

ஹலாசனம்

இந்த ஆசனம் முகம் மற்றும் தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் சருமம் ஒளிரும்.

சர்வாங்காசனம்

இந்த ஆசனம், தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மந்தநிலையை அகற்ற உதவுகிறது. இது முகப்பரு மற்றும் பருக்களை சமாளிக்க உதவுகிறது.

முக பளபளப்புக்கான யோகா

திரிகோசாசனம்

இந்த ஆசனம் முகம் மற்றும் தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிஜன் சரியான அளவில் கிடைத்தால் சருமம் அழகாக இருக்கும்.

சிசுவாசனம் 

இந்த ஆசனம் தலை பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வை நீக்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.