இந்தியா

கரோனா அச்சத்தால் அரசு ஊழியர் தற்கொலை

தினமணி

சஹரன்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அச்சத்தால் அரசு ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2032 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 58 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அச்சத்தால் அரசு ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக சஹரன்பூர் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் கூறுகையில், ‘குறிப்பிட்ட அந்த அரசு ஊழியர் கடந்த இரண்டு நாட்களாக கரோனா குறித்த அச்சத்தால் மன உளைச்சலுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வியாழனன்று அவர் பணியாற்றும் அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவர் எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்திலும் அவர் அதையே குறிபிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT