இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல், டீசல் டேங்குகளில் தீ
குஜராத் மாநிலத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எண்ணெய் டேங்குகள் தீப்பிடித்து எரிந்தன.
குஜராத் மாநிலத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எண்ணெய் டேங்குகள் தீப்பிடித்து எரிந்தன.
ஹஹீரா பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமாக ஒன்பது எண்ணெய் டேங்குகள் உள்ளன. இவற்றில் ஐந்தில் பெட்ரோலும் நான்கில் டீசலும் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். இதில் சனிக்கிழமை நண்பகல் ஒரு எண்ணெய் டேங்கில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து மற்ற எண்ணெய் டேங்குகளிலும் தீப்பற்றி வெடிக்க ஆரம்பித்தது. உடனே சூரத் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உயிர்ச் சேதம், பொருள் சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.