முகப்பு
இந்தியா

சிறார் வயது வரம்பை 16 ஆக நிர்ணயிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

பெண்களுக்கு எதிராக பெருகி வரும் குற்றச்செயல்களைக் கருத்தில் கொண்டு சிறார்களின் வயது வரம்பை 16 ஆக நிர்ணயிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

Updated On : 13 மே 2013, 5:06 am IST
பகிர்:

பெண்களுக்கு எதிராக பெருகி வரும் குற்றச்செயல்களைக் கருத்தில் கொண்டு சிறார்களின் வயது வரம்பை 16 ஆக நிர்ணயிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

பெண்களுக்கு எதிராக சிறார்கள் குற்றம் இழைப்பது அதிகரித்து வருவதால், சிறார்களுக்கு வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் எனவும், குற்றங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என பெண்கள் மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பல்வேறு அமைப்புகள் அளித்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கடத்தல் என்ற தலைப்பில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

சிறுவர்களுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16-ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2010-ம் ஆண்டு 22,740 குற்றங்கள் சிறார்களால் இழைக்கப்பட்டன.

கடந்த 2011-ம் ஆண்டில் இது 10.25 சதவீதம் அதிகரித்து 25,125 குற்றங்களை இழைத்தனர். பெண்களுக்கு எதிராக சிறார்கள் குற்றம் இழைப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் 856 பாலியல் பலாத்காரங்கள், 391 பெண்கள் கடத்தல், 536 மானபங்க சம்பவங்களில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கடந்த 2011-ம் ஆண்டில் 1149 பாலியல் பலாத்காரங்கள், 600 பெண்கள் கடத்தல், 573 மானபங்க சம்பவங்களில் சிறார்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்த போது, 16 முதல் 18 வயது நிறைந்த குடும்பச் சூழல்நிலை, வெறி, ஆடம்பர வாழ்க்கை முறை, கட்டுப்பாடற்ற சுதந்திரம், சுற்றுப்புற தன்மை போன்றவற்றால் சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் ஓடும் பஸ்சில் நடைபெற்ற மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் 16 வயது சிறுவன் ஈடுபட்டதை கருத்தில் கொண்டு தேவையான நிவாரணப் பணிகளை அனைத்து துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.