பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படியே சிபிஐ அறிக்கையில் திருத்தம்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. அறிக்கை, பிரதமர் அலுவலகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்படிதான் திருத்தப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:÷""சி.பி.ஐ. அறிக்கை திருத்தப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, முக்கிய விஷயத்தை மூடி மறைக்கும் விதமாக அஸ்வனி குமார் ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின்படிதான் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளை பொறுத்தவரை, அவர்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். சிலரின் அறிவுறுத்தலின்படியே அவர்கள் செயல்பட்டுள்ளனர்'' என்றார் அருண் ஜேட்லி.