முகப்பு
இந்தியா

100 ஹோவிட்சர் பீரங்கிகள் கொள்முதல்: எல் அன்ட் டி, ரஷிய நிறுவனம் இடையே நேரடி போட்டி

ராணுவத்துக்கு ரூ.2000 கோடி மதிப்பில் 100 ஹோவிட்சர் வகை பீரங்கிகளை சப்ளை செய்வது தொடர்பாக, எல் அன்ட் டி நிறுவனத்துக்கும் ரஷிய நிறுவனத்துக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

Updated On : 13 மே 2013, 1:01 am IST
பகிர்:

ராணுவத்துக்கு ரூ.2000 கோடி மதிப்பில் 100 ஹோவிட்சர் வகை பீரங்கிகளை சப்ளை செய்வது தொடர்பாக, எல் அன்ட் டி நிறுவனத்துக்கும் ரஷிய நிறுவனத்துக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ரூ.20 ஆயிரம் கோடி செலவில் ராணுவ தளவாடங்களை நவீனமயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு வகையைச் சேர்ந்த 2,814 பீரங்கிகள் வாங்கப்படும். அதில் 100 ஹோவிட்சர் வகை பீரங்கிகளை வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல் அன்ட் டிக்கும் ரஷியாவின் ரோúஸாபரோன்எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுவதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

பீரங்கிகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் இந்திய நிறுவனம் போட்டி போடுவது இதுவே முதன்முறை. இவ்விரு நிறுவனங்களின் பீரங்கிகளும் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் சோதனை முடிவடைந்ததும், ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

எல் அன்ட் டி நிறுவனத்தால் வழங்கப்பட உள்ள பீரங்கிகள் தென்கொரியாவின் சாம்சங் டெக்வின் நிறுவனத்தின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இவ்விரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தப்படி, பீரங்கிகளுக்கான தொழில்நுட்பத்தை சாம்சங் வழங்கும்.

கடந்த 1986ஆம் ஆண்டு 410 ஹோவிட்சர் பீரங்கிகள் வாங்குவது தொடர்பாக போஃபர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பீரங்கி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

போஃபர்ஸ் நிறுவனத்திடம் பீரங்கி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.