இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் 1,384 இந்தியர்கள் வெளிநாடுகளில் தற்கொலை: மத்திய அரசு தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளில் வசித்துவந்த இந்தியர்களில் 1,384 பேர் தற்கொலை செய்துகொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

PTI

கடந்த மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளில் வசித்துவந்த இந்தியர்களில் 1,384 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் போது, மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதில் விவரம்:

உலகம் முழுவதும் உள்ள 142 நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்ககள் அளித்த தகவலின்படி, கடந்த 2013-ல் 497 பேரும், 2014-ல் 451 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். நிகழாண்டில், டிசம்பர் 4 ஆம் தேதி வரை 436 பேரும் தற்கொலை செய்துகொண்டனர்.

வளைகுடாவின் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் 541 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.  குறிப்பாக சவூதி அரேபியாவில் 337 பேரும், ஓமனில் 123 இந்தியர்களும் இறந்துள்ளனர்.

சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரெய்ன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள 36,714 பேர் பல்வேறு காரணங்களால் இந்தியா வர முடியாமல் தவித்து வருகின்றனர் என்றார் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT