இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: பிரதமர் அலுவலகத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற ராகுலுக்கு பாஜக கண்டனம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு,

PTI

நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பிரதமர் அலுவலகம் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனகூறியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் சொத்துகளை முறைகேடாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சோனியா, ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் வருகிற 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதன் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தை முடக்கினர். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது எங்களை பழிவாங்கும் நோக்குடன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொடரப்பட்டதாகும். இதில் 100 சதவீதம் அரசியல் உள்ளது. மக்களின் பிரச்னைகளை எழுப்பும் எதிர்க்கட்சியினரை முடக்கும் அரசியலில் பாஜகவினர்  ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

பாஜக பதிலடி

ராகுலின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, இதை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ராகுலுக்கு போதிய தைரியம் இல்லை என்றார்.

நாடாளுமன்றத்தை முடக்குவதின் பின்னணியில் ராகுல் உள்ளார் என குற்றம்சாட்டிய ரூடி, ராகுல் பிரமதர் அலுவலகம் குறித்த கூறிய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய  வேண்டும் என்றார்.

இப்பிரச்னை குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தை முடக்க கூடாது. அரசும், நாடாளுமன்றமும் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT