இந்தியா

முல்லைப் பெரியாறு: புதிய அணை கட்டுவதே தீர்வு என கேரள முதல்வர் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் புதிய பாதுகாப்பு அணை கட்டுவேதே ஒரே தீர்வு என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

PTI

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் புதிய பாதுகாப்பு அணை கட்டுவேதே ஒரே தீர்வு என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தமிழக அரசின் பராமரிப்பில் உள்ள முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்குதவற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் உபரி நீர் கேரள மாநிலம் வழியாக திறந்து விடப்படுகிறது. முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக கேரள அரசு தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.

கேரளாவில், அணையின் கீழே வசிக்கும் ஐந்து மாவட்ட மக்கள் மீது தமிழக அரசு கவலை கொள்ளவில்லை என முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று பேரவையில் கூறினார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பகிர்வு தொடர்பாக தமிழகத்துடன் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூறாண்டு பழைமைவாய்ந்த இந்த அணை அத்தனை ஆண்டுகாலம் பாதுகாப்பாக இருக்கும் என யாரேனும் உறுதியாகக் கூற முடியுமா?

மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்வு என்பது யாருக்கு? எவ்வளவு? என்ற பிரச்னை நாடு முழுவதும் இருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் வித்தியாசமானது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் - கேரளத்துக்குப் பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் கேரளம் உறுதியாக இருக்கிறது.

புதிய அணை கட்டுவதே இந்த விவகாரத்துக்கான ஒரே தீர்வாக இருக்கும். இதை மத்திய அரசிடமும், பிரதமரிடமும் எடுத்துரைக்க உள்ளோம். இந்த விவகாரத்துக்கு நிர்வாகரீதியாகவும், சட்டரீதியாகவும் தீர்வு காணும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது என்றார் உம்மன்சாண்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT