பிகாரில் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ், குதிரையில் பயணம் செய்தார்.
பிகாரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மகா கூட்டணி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷீ குமார் தலைமையில் ஆட்சி அமைத்தது. கூட்டணி அமைச்சரவையில் பிரதானக் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளத்தின் சார்பில், அதன் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு இடம் அளிக்கப்பட்டது.
அவருக்கு சுகாதாரத் துறையுடன் சுற்றுச்சூழல் துறையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது இல்லத்தில் இருந்து அலுவலகம் வரை தேஜ் பிரதாப் யாதவ் குதிரையில் சனிக்கிழமை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிகார் தலைநகர் பாட்னா உள்பட பல இடங்களில் மாசு அதிகரித்து வருகிறது. குதிரை, சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்துவதால் மாசுவைக் குறைக்க முடியும். இதுகுறித்து விழிப்புணர்வை ஏர்படுத்துவதற்காகவே இந்த முயற்சி என்றார் அவர்.
அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவின் இச்செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பிரேம் குமார் கூறுகையில், "பிகார் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறும் வேளையில் சுகாதாரத் துரை அமைச்சர் தேஜ்பிரதாப் யாதவ் ஆனந்தமாக குதிரை சவாரி மேர்கொள்வது கண்டிக்கத்தக்கது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.