இந்தியா

இரு பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இரு பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

PTI

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இரு பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

ராஞ்சியின் மலைப் பகுதியான பாரியாட் பகுதியில் கடந்த டிசம்பர் 20 ஆம்தேதி 17 மற்றும் 19 வயதுடைய இரு பெண்களை ஒரு கும்பல் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.

ஆறு இளைஞர்கள் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதில் 4 பேரை இன்று கைது செய்துள்ளதாகவும் ராஞ்சி காவல் துறை கண்காணிப்பாளர் பிரபாத் குமார் கூறினார். தலைமறைவாக உள்ள இருவரை போலீஸார் தேடி வருகின்றனர் என்றார்.

கடந்த 20 ஆம் தேதி சந்தைக்கு சென்ற அந்த இரு பெண்களையும், ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. அவர்களை மலை உச்சிக்கு அழைத்து சென்ற அவர்கள் அங்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அன்று இரவே அவர்களை விடுவித்துவிட்டனர்.

வீட்டுக்கு திரும்பிய அப்பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நான்கு இளைஞர்களை இன்று கைது செய்தனர்.

வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, தென் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புண்டு. மேலும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புண்டு என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT