இந்தியா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

PTI

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடுமையான காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக கடந்த 24 ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முஃப்தி முகமது சயீத்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் கூறினர்.  79 வயதான அவரின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அவர் சுயநினைவுடன் உள்ளார். மேலும், அவருக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர். சிறப்பு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வரும் முஃப்தி முகமது சயீத்தை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT