இந்தியா

நடுவானில் விமான ஊழியர் மீது தாக்குதல்: கனடா-இந்தியர் கைது

கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து புது தில்லிக்கு புறப்பட்ட விமானத்தில், நடுவானில் விமான ஊழியர் ஒருவரை கனடா-இந்தியர் ஒருவர் தாக்கினார்.

PTI

கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து புது தில்லிக்கு புறப்பட்ட விமானத்தில், நடுவானில் விமான ஊழியர் ஒருவரை கனடா-இந்தியர் ஒருவர் தாக்கினார். இதையடுத்து விமானம் மீண்டும் டொரண்டோ நகருக்கு திருப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

ஏர் கனடா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று  கனடா நாட்டின் டொரண்டோ நகரிலிருந்து புது தில்லிக்கு புறப்பட்டது.

விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணம் செய்த கனடா-இந்தியர் ஜாஸ்கரன் சித்து (47), விமானப் பணிப் பெண் ஒருவரை தாக்கியதாகத் தெரிகிறது.

இதையடுத்து விமானம் உடனடியாக மீண்டும் டொரண்டோ நகருக்கு திருப்பட்டது. அங்கு போலீஸார் சித்துவை கைது செய்தனர். உடல்ரீதியாக தாக்குதல், விமானப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சித்துவால் தாக்கப்பட்ட அந்த பணிப்பெண்ணுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT