கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நேர்ந்த மோசமான பத்து கூட்ட நெரிசல் விபத்துகள் – 1000 பேருக்கு மேல் பலி
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் பல இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் இடுபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் பல இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் இடுபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
2005-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட பெரிய விபத்துகள் பற்றிய பட்டியல் -
1. 2005, ஜனவரி 26 - மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
Advertisement
2. 2006, ஆகஸ்ட் 3 - ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் நைனா தேவி கோயிலில் ஏற்பட்ட விபத்தில் 150 பேர் பலியானார்கள். 400 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
3. 2008, செப்டம்பர் 30 - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மலை மேல் உள்ள சாமுண்டா தேவி கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் 120 பேருக்கு மேல் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர்.
4. 2010, மார்ச் 4 - உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள ராம் ஜானகி கோயிலில் இலவச சேலை மற்றும் உணவு வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.
5. 2011, ஜனவரி 14 - கேரள மாநிலம் சபரிமலையில் ஏற்பட்ட விபத்தில் 106 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர். 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
6. 2011, நவம்பர் 8 - ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.
7. 2012, நவம்பர் 19 - பிகார் தலைநகர் பட்னாவில் சாத் விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பலியாகினர்.
8. 2013, பிப்ரவரி 10 - கும்பமேளாவின்போது அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர்.
9. 2013, அக்டோபர் 13 - மத்தியப் பிரதேச மாநிலம் தாதியாவில் உள்ள ரத்தன்கர் ஹிந்து கோயில் அருகே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 89 பேர் பலியாகினர். 100 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
10. பிகார் தலைநகர் பட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற தரசா விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியாகினர்.
இன்று (ஜூலை 14-ம் தேதி) ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.