பேஸ்புக்கில் நுழைந்தார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, சமூக தளங்கள் வழியாக ஏராளமான மக்களை தொடர்பு கொள்ளும் வகையில் பேஸ்புக்கில் தனக்கென ஒரு கணக்கைத் துவக்கியுள்ளார்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, சமூக தளங்கள் வழியாக ஏராளமான மக்களை தொடர்பு கொள்ளும் வகையில் பேஸ்புக்கில் தனக்கென ஒரு கணக்கைத் துவக்கியுள்ளார்.
பேஸ்புக்கில் தனது முதல் பதிவாக, இதுவரை நான் பொதுமக்களை அதிகம் தொடர்பு கொள்ளும் வகையில் டிவிட்டரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். ஆனால், அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக தளத்தை நான் மறந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
டிவிட்டரில் எனது கருத்துக்களை பதிவு செய்து வந்தேன். அது சற்று சிரமமாக இருந்து வந்தது. இனி பேஸ்புக்கிலும் எனது கருத்துக்களை பதிவிடலாம். எனது பேஸ்புக்கில் ஒரு டிக் மார்க் இருக்கும். அதுதான் எனது உண்மையான பேஸ்புக் பக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement