செங்கல் நன்கொடையில் பெய்ஜிங் சாதனையை முறியடித்தது அமராவதி
செங்கல் நன்கொடையில், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி புதிய சாதனை படைத்துள்ளது.
செங்கல் நன்கொடையில், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி புதிய சாதனை படைத்துள்ளது.
அமராவதி புதிய தலைநகர் நிர்மாண பணிகளுக்கு செங்கல் நன்கொடை அளிப்பவர்களுக்காக ஆந்திர அரசு 'என் செங்கல் என் அமராவதி' என்ற இணையதளத்தை தொடங்கியது.
அதன் மூலம் வெளிநாடுகளிலிருந்தும் பலர் அமராவதியில் புதிய தலைநகர் கட்டட பணிகளுக்கு செங்கல் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 மணி நேரம் 14 நிமிடத்தில் சுமார் 1,05,803 செங்கல்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
Advertisement
இது பெய்ஜிங் நகர் நிர்மாணத்தின் போது சீன மக்கள் செய்த கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது. அப்போது 24 மணிநேரத்தில் 1,05,803 செங்கல்கள் நன்கொடையாக அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.