குர்கான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் நிலைமை மிகவும் கவலைக்கடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குர்கானில் உள்ள மேதாந்தா-மெடிசிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சிங்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிங்காலின் தற்போதைய உடல்நிலை குறித்து எவ்வித மருத்து அறிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடா நிலையில், அவருக்கு இதயம், மூச்சுவிடுதலில் பிரச்சினை இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிங்கால், உடல்நிலை தேறினதையடுத்து வீடு திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.