இந்தியா

சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு

ANI

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், சில நாள்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் சர்வதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியா கொண்டுவரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர், சோட்டாராஜன் மீதான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நவம்பர் 7 ஆம் தேதி முதல் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.  பத்து நாள்கள் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று அவரது காவலை நவம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT