முகப்பு
இந்தியா

ராகுல் குடியுரிமை பிரச்னை: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

Updated On : 24 நவம்பர், 2015 at 3:41 PM
பகிர்:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து  கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

வழக்கறிஞர் மனோகர் லால் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு, 'விரைவாக விசாரிக்க வேண்டிய அளவுக்கு இதில் முக்கியத்துவம் இல்லை' என்றனர்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான மனோகர் லால், ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளார். மக்களவை உறுப்பினராக உள்ள அவர் இந்திய தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார் என்றார்.

Advertisement

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து, அதன் முடிவுகளை உச்ச நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் போது, வேட்பாளர்கள் அனைவரிடமும் குடியுரிமை குறித்த முழ விவரத்தையும் கேட்டு, அதற்கான ஆவணங்களையும் பெற வேண்டும் என்றார்.

எனினும், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.