இந்தியா

ஏர் இந்தியா மேலாளரை கன்னத்தில் தாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு

ஏர் இந்தியா மேலாளரை கன்னத்தில் அறைந்தாதக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PTI

ஏர் இந்தியா மேலாளரை கன்னத்தில் அறைந்தாதக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பட் மக்களவை தொகுதியிலிருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மி. மிதுன் ரெட்டி.

அவர் நேற்று திருப்பதியில் உள்ள விமான நிலையத்துக்கு தனது உறவினர் ஒருவரை வரவேற்க சென்றார். அப்போது, விமான நிலையத்துக்குள் செல்வதற்கான அனுமதி சீட்டு பெறுவது தொடர்பாக அவருக்கும், ஏர் இந்தியா மேலாளர் ராஜசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் எம்.பி., ஏர் இந்திய மேலாளரை கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் ஏற்பேடு போலீஸார் எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது அத்துமீறி நுழைதல், கிரிமனல் எண்ணத்தோடு தாக்குதல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள், எம்.பி. மிதுன் ரெட்டி, மேலாளரிடம் அத்துமீறி நடத்து கொண்டதாக கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT