தில்லி ஆம் ஆத்மி அரசு கொண்டுவரவுள்ள புதிய லோக்பால் மசோதா குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயாரா என அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியை ஆளும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி புதிய ஜன் லோக்பால் மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இந்த புதிய லோக்பால் மசோதா, ஊழல் எதிர்ப்பு இயக்கம் முன்னெடுத்த லோக்பால் மசோதா போல் இல்லை என குற்றம்சாட்டிய பூஷன், இதை எதிர்த்து தில்லி பேரவை முன்புபோராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்த புதிய லோக்பால் மசோதாவை ஜோக்பால் மசோதா (சிரிப்பு மசோதா) என வர்ணித்துள்ள பூஷன், புதிய மசோதாவின்படி அனைத்து அதிகாரங்களையும் அரசு கையில் வைத்திருக்கும் என்றார்.
ஆம் ஆத்மி அரசு கொண்டுவந்துள்ள மசோதா, அண்ணா ஹாசாரே முன்மொழிந்த லோக்பால் மசோதாதான் என்றால், அதை அமல்படுத்துவதற்கு இவ்வளவு காலதாமதம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் கேஜரிவால் பொதுவெளியில் விவாதம் நடத்த முன்வர வேண்டும் என்றார் பூஷன்.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராந்த பூஷன் தந்தையும் முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன், அரவிந்த் கேஜரிவால், ஹிட்லரின் அமைச்சர் கோயபல்ஸ் போல் ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி வருகிறார் என்றார்.
ஆட்சிக்கு வந்தால் பேரவை உறுப்பினர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என்ற கேஜரிவால் தற்போது அதை இரண்டரை மடங்காக உயர்த்திவிட்டார் என்றார் சாந்தி பூஷன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.