குடிபோதையில் தள்ளாடியதாக தவறான விடியோ: இழப்பீடு கோரிய தில்லி போலீஸின் மனு தள்ளுபடி
பணி அசதியில் மயங்கி விழுந்த தன்னை, விடியோ எடுத்த சிலர், குடிபோதையில் காவலர் மயங்கி விழுந்ததாக சமூக தளங்களில் விடியோவை பரப்பியதற்கு இழப்பீடு கோரிய தில்லி காவலரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தில்லி காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் பி.கே. சலீம், பணி முடிந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது, பணிச்சுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கே இருந்த பயணிகள் அதனை விடியோ பதிவு செய்து, அதனை, சமூக தளங்களில் குடிபோதையில் போலீஸ் ஒருவர் தள்ளாடுவதாகக் கூறி பதிவேற்றம் செய்தனர்.
Advertisement
இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, அவர் உச்ச நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.