இந்தியா

மும்பையில் குறைந்து வருகிறது தற்கொலை செய்வேரின் எண்ணிக்கை

தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், மும்பையில் கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்வோரின்

PTI

மும்பை : தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், மும்பையில் கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விஷயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

கடந்த 2013ல் மும்பையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,322 ஆக இருந்தது. இதுவே 2014ல் 1,196 ஆகவும், 2015ல் 1,122 ஆகவும் குறைந்துள்ளதாக மும்பை காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

பிரச்னைகக்கு எதிராக போராடும் குணம் மக்களிடையே அதிகரித்திருப்பதே இந்த புள்ளி விவரத்தின் மூலம் நாம் அறியும் நல்ல செய்தி என்று மும்பை காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தனஞ்செய் குல்கர்னி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT