கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தலின் சிலப் பகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற்றது. பிறப்பகுதிகளுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிப்பூர் தொகுதியிலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
ஏராளமான கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர், பவானிப்பூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தீபா தாஸ் முன்ஷியும், பா.ஜ.க.வின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேத்தியான சந்திரா போஸூம் போட்டியிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.