இந்தியா

சரிதா நாயர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார் உம்மன் சாண்டி

சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் மீது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

PTI

திருவனந்தபுரம்  : சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் மீது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உம்மன் சாண்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சரிதா நாயர் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து கேரள நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான தகவலைக் கூறியதாக சரிதா நாயர் மீதும், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட 2 மலையாளம் நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, சூரிய மின்தகடு முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர், கடந்த 2013ஆம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்தபோது 23 பக்க கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில், உம்மன் சாண்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்ததாக மலையாள செய்தி ஊடகம் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT