முகப்பு
இந்தியா

குப்வாரா மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Updated On : 21 ஏப்ரல், 2016 at 10:22 AM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

லோலாப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இன்று அதிகாலை ஒரு பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்து, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டப்படி தப்பி செல்ல முயன்றனர். இதையடுத்து ராணுவ வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

Advertisement

இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அடுத்தடுத்து 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடலை ஆய்வு செய்த ராணுவத்தினர் 2 தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்–இ–தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதால், தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.