இந்தியா

அலிகர் பல்கலை.யில் துப்பாக்கிச் சண்டை: 2 இளைஞர்கள் பலி

தினமணி

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை இரவு இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் முன்னாள் மாணவர் ஒருவரும், மற்றொரு இளைஞரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அலிகர் மண்டல காவல்துறை டிஐஜி கோவிந்த் அகர்வால், செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் "மும்தாஜ்' என்ற பெயரிலான மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதிக்குள் தங்கியிருந்த ஒரு மாணவரின் அறையை சிலர் சனிக்கிழமை இரவு தீயிட்டுக் கொளுத்தினர்.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரியிடம் அந்த மாணவர் புகார் அளிக்கச் சென்றார். அப்போது, அந்தச் செய்தி வெளியே பரவியது. இதையடுத்து, ஆஸம்கர் நகரைச் சேர்ந்த மாணவர்களும், சம்பல் நகரைச் சேர்ந்த மற்றொரு மாணவர்களும்

மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த மோதலில் அப்பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர் மெஹ்தாப் என்பவர் உயிரிழந்தார். தகவலறிந்து, சிறப்பு அதிரடிப் படை போலீஸாருடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்றோம். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்கு சிறப்பு அதிரடிப் படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் கோவிந்த் அகர்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT