உத்தரகண்ட் விவகாரம்: மத்திய அரசுக்கு 7 கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம்
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியது தொடர்பாக மத்திய அரசுக்கு 7 கேள்விகளை எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், அதற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி : உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியது தொடர்பாக மத்திய அரசுக்கு 7 கேள்விகளை எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், அதற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 7 கேள்விகளை எழுப்பியது.
Advertisement
அரசியல் சாசன பிரிவின்படி உத்தரகண்டில் ஆளுநர் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைக்க முடியுமா?
எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால்தான் 365ன் படி உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை உச்ச நீதிமன்றம் முன் வைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.