முகப்பு
இந்தியா

ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க உத்தரவு: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆதர்ஷ் குடியிருப்பை இடித்துவிட மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2016 at 4:09 PM
பகிர்:

மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆதர்ஷ் குடியிருப்பை இடித்துவிட மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி கழகத்தால் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட 31 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை இடித்துவிடும்படி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், இந்த உத்தரவை செயல்படுத்த 12 வாரங்கள் கால அவகாசம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மேலும், ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடுகளை ஒதுக்கக் காரணமாக இருந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.