மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி
மும்பையில் இன்று மதியம் 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மும்பை : மும்பையில் இன்று மதியம் 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கிராட் ரோட் அருகே கமதிபுரா என்ற பகுதியில் இருந்த அடுக்குமாடிக் கட்டடம், பிற்பகல் 2 மணியளவில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
உடனடியாக நடந்த மீட்புப் பணியில் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.