முகப்பு
வணிகம்

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?

புதிய ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவிருக்கிறது பற்றி..

Updated On : 25 ஏப்ரல், 2026 at 3:17 PM
ரியல்மி சி100எக்ஸ் - X image
பகிர்:

ரியல்மி நிறுவனமானது, தன்னுடைய ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது. அதிகாரப்பூர்வ தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், ரியல்மிசி100எக்ஸ் பற்றிய சில தகவல்கள் கசிந்து, செல்போன் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு கனவாக மாறியிருக்கிறது.

அதாவது 6.7 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் சி100எக்ஸ் ஸ்மார்ட்போன், 120Hz ரிஃப்ரஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது.

Advertisement

ஆண்டிராண்டு 16 இயங்குளத்துடன், அடுத்தடுத்து அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் செல்போனின் பயன்பாட்டுக் காலத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும்.

பலரும் விரும்பும் வகையில் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் வசதியுடன் இது அறிமுகமாகிறதாம்.

50 எம்பி ரியர் கேமரா என்றால் புகைப்படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். முன்பக்க கேமராவும் செல்ஃபிக்களுக்காகவும், விடியோ கால் அழைப்புகளுக்காகவும் 5 எம்பி கேமராவுடன் வருகிறது என்பது கூடுதல் அம்சமாக உள்ளது.

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பில் ஐபி65 ரேட்டிங், 8000mAh பேட்டரி என்பதுதான் செல்போன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்டாக அமையும். சார்ஜ் போடுவது பற்றி கவலையே பட வேண்டாம். இந்த போன் இரண்டு நாள்களுக்கு பேட்டரி பேக்கப் இருக்கும். 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

நிறம்.. இதுதான் அல்டிமேட். கோல்டன் மற்றும் டீப் ப்ளூ டைட் நிறங்கள் இதனை வாங்க நினைப்பவர்களுக்கு மேலும் ஆசையைத் தூண்டுகிறது.

இவ்வளவு அம்சங்கள் இருந்தாலும் இது ரூ.15 ஆயிரம் என்ற பட்ஜெட் விலையில் வரவிருக்கிறது என்பதுதான் ஹைலைட். இது பற்றிய செய்திகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்தே செல்போன் வாங்கக் காத்திருப்பவர்களிடையே பல எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கியிருக்கிறதாம்.

summary

The new Realme C100X smartphone is about to be launched..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.