இந்தியா

அதிக பணப் புழக்கமே ஊழலுக்கு அடிப்படை

தினமணி

அதிக அளவிலான ரொக்கக் கையிருப்பே ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் முக்கிய காரணமாக இருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், அத்தகைய முறைகேடுகள் நிகழாத நாடாக இந்தியாவை உருவாக்க வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து லிங்க்ட்இன் டாட் காம் என்ற இணையதளத்தில், பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில், 21-ஆம் நூற்றாண்டில் ஊழலுக்கு இடமில்லை. ஊழலால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதோடு, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவுகளும் தடுக்கப்படுகின்றன. அதிக அளவில் ரொக்கக் கையிருப்பு வைத்திருப்பது, ஊழலுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறி, மற்றவர்களுக்கு தூண்டுகோலாக அமைய வேண்டும். அது, ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் இடமில்லாத இந்தியாவை உருவாக்க வலுவான அடித்தளம் அமைக்கும்.
தற்போது, செல்லிடப்பேசி வங்கிச் சேவை, செல்லிடப்பேசி பணப்பை (வாலட்) ஆகியவற்றின் யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவற்றின் மூலம், உணவு, வாடகைக் கார்களை அழைத்தல், மேஜை-நாற்காலிகள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.
ஏற்கெனவே, பெரும்பாலானோர் வங்கி அட்டைகளையும் இ-வாலட்களையும் பயன்படுத்தி வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனினும், ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் பெருகியுள்ளன. அவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த மாதம் 8-ஆம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த பிறகு, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் சிறு வணிகர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துக்கு மாறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு காரணமாக மக்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். எனினும், நீண்ட கால நன்மைக்காக இந்த குறுகிய காலச் சிரமங்களை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

SCROLL FOR NEXT