ஜெயலலிதா மறைவு: இரங்கல் தெரிவித்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
ஜெயலலிதா மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
1984 - 89 ஆண்டுகள் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவி வகித்துள்ளார்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரு அவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பேசுகையில், "மிகச் சிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா குறித்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறுகையில், "மக்களின் உண்மையான தலைவராக செல்வி ஜெயலலிதா திகழ்ந்தார். அதனால்தான் அவரை அனைவரும் அம்மா என்றும், புரட்சித் தலைவவி என்றும் அழைக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.