முகப்பு
இந்தியா

இன்ஸ்டாகிராமில் புது வசதிகள் வந்தாச்சு: என்னனு தெரியனுமா?

புகைப்படங்களைப் பகிர உதவும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.

Dinamani
Updated On : 7 டிசம்பர், 2016 at 1:59 PM
பகிர்:

நியூயார்க்: புகைப்படங்களைப் பகிர உதவும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராமின் தலைமை செயல் அலுவலரான கெவின் ஸிஸ்ட்ரோம் செவ்வாயன்று வலைபக்க   பதிவொன்றில் இது பற்றி வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:

இன்ஸ்டாகிராம் மூலமாக தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்பவர்கள் சில சமயங்களில் வேறு யாரும் அந்த புகைப்பபடம் குறித்து கமெண்ட் செய்வதை விரும்பாமல் இருக்கலாம். அவ்வாறு நினைப்பவர்கள் இனி ஒரு புகைப்படத்தைப் பதிவிடும் போதே, 'அட்வான்ஸ்ட் செட்டிங்ஸ்' பகுதியில் 'டர்ன் ஆப் கமெண்ட்டிங்' என்ற விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம். பதிவிட்ட பிறகு இதனை எப்பொழுது வேண்டுமானாலும் மறுபடியும் மாற்றிக் கொள்ளலாம்.

Advertisement

அதே போல் குறிப்பிட்ட படம் குறித்து மற்றவர்கள் இடும் கமெண்ட்டுகளை லைக் செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கமெண்ட்டுக்கு அருகிலும் உள்ள 'இதய' ஐகானை அழுத்தி நாம் குறிப்பிட்ட ஒரு கமெண்டை லைக் செய்ய முடியும். 

அதே போல் மற்றொரு கூடுதல் வசதியாக இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்பவர்கள் யாரையாவது  உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், அவரை நீங்கள் நீக்கி விடலாம். அவருக்கு அது தொடர்பாக எந்த அறிவிப்பும் கிடைக்காது.முன்னர் என்றால் நீங்கள் அவரை ஒட்டுமொத்தமாக 'ப்ளாக்' செய்வது ஒன்று மட்டுமே வாய்ப்பாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன் ஒரு குறிப்பிட்ட பதிவு யாரையாவது தரம் தாழ்த்துவதாக ஒருவர் நினைத்தால், உங்களை வெளிக்காட்டாமல் அந்த பதிவினை பற்றி புகார் செய்யும் வசதியும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.