புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என்று யோசிப்பதாக, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வேதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இன்றும், மக்களவையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த எல்.கே. அத்வானி, அருகில் அமர்ந்திருந்த ஸ்மிருதி இராணியிடம், எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விடலாமா என்று யோசிக்கிறேன்? என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து ஸ்மிருதி இராணி, அருகில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்டம் தெரிவித்தார்.
உடனே, ராஜ்நாத் சிங், அத்வானியை நெருங்கி, அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அத்வானி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், நாளை மக்களவையை சுமூகமாக நடத்தி, ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சுமித்ரா மகாஜனிடம் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம், எந்த விவாதமும் இன்றி நிறைவு பெறுவது 'வாஷ் அவுட்'. இது நடக்கக் கூடாது என்று அத்வானி அருகில் இருந்த பாஜக எம்பிக்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.