இந்தியா

விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக மோடி உறுதி அளிக்கவில்லை: ராகுல்

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக மோடி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


புது தில்லி: விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக மோடி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

அது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ராகுல், நாட்டில் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது. எனவே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தினேன்.

அனைத்துப் பிரச்னைகளையும் கேட்டுக் கொண்ட மோடி, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மதியம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT