முகப்பு
இந்தியா

பதான்கோட் தாக்குதல்: ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! 

பதான்கோட் விமானதள தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட நான்கு பேர் மீது... 

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

புதுதில்லி: பதான்கோட் விமானதள தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு ஆணையம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானதளத்தில் இந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நான்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு ஆணையம் விசாரித்து வந்தது.    

தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Advertisement

பதன்கோட் விமான தள தாக்குதல் வழக்கில், திங்களன்று பஞ்சாபின் பஞ்ச்குல்லாவில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், முப் ஃதி அப்துல்  ரவுப் அஸ்கர்,  துணைத்தலைவரும் மசூத் அசரின் சகோதரருமான சாகித் லத்திப், கமாண்டர் காசிப் ஆகிய நான்கு முக்கிய குற்றவாளிகள்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments