கொழும்பு: இலங்கை சிறைகளில் வாடும் 20 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை ஏற்று தற்போது இலங்கை சிறைகளில் தற்பொழுது வாடும் 20 மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம், அட்டர்னி ஜெனரலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் கிடைத்தவுடன், நீதிமன்றத்தில் மீனவர்களை விடுதலை செய்ய ஆட்சேபனை இல்லை என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவிப்பார்.
வரும் ஜனவரி 2-ஆம் தேதி அன்று மீனவர் பிரச்சினைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய மீன்வளத்துறை அமைச்சர் இலங்கை வரவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை கண்டிப்பாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகும்.
இவ்வாறு அமரவீரா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.