இந்தியா

கல்வி நிலையத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவு: 100 பேர் வாந்தி, மயக்கம்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றில் நேற்று இரவு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட  மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர்...

PTI

மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றில் நேற்று இரவு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட  மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் புகழ்பெற்ற அலீகார் முஸ்லீம்  பல்கலைக்கழகத்தின் கிளை கல்வி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.   

இதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர் பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் இன்று காலை வீடு திரும்பினர். மற்றவர்கள்  இன்னும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆயினும் அவர்கள் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்வி நிலைய நிர்வாகம் இது குறித்து  தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT