முகப்பு
இந்தியா

சி.பி.ஐ அதிகாரிகள் போல் நடித்து ஹைதராபாத் தனியார் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கம் கொள்ளை!

ஹைதராபாத் புறநகர் பகுதியான ராமசந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள், சி.பி.ஐ அதிகாரிகள் போல் நடித்து 46 கிலோ தங்க நகைகளை...

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:

ஹைதராபாத்: ஹைதராபாத் புறநகர் பகுதியான ராமசந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள், சி.பி.ஐ அதிகாரிகள் போல் நடித்து 46 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். 

ஹைதராபாத் புறநகர் பகுதியான ராமசந்திரபுரம் பகுதியில் பிரபல முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்று அமைந்துள்ளது. அங்கே இன்று காலை மர்ம நபர்கள் நான்கு பேர்கள் வந்தனர். தங்களை சி.பி,.ஐ அதிகாரிகள் என்று கூறிய அவர்கள்,  நிதி நிறுவன ஆவணங்கள் மற்றும் லாக்கரில் உள்ள தங்க நகைகளை சோதனை செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

உயர் அதிகாரிகள்  அனுமதி இல்லாமல் லாக்கர்களை சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறிய ஊழியர்களை, சி.பி.ஐ அதிகாரிகள்  கட்டளைக்கு கீழ்ப்படிய மறுப்பது தவறு என்று கூறி அவர்கள் எச்சரித்தனர்.

பின்னர் லாக்கர்களை சோதனை செய்ய ஊழியர்கள் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த தங்க நகைகளை தங்களிடம் இருந்த பைகளில் நிரப்பத் தொடங்கிய அவர்கள், தடுத்த ஊழியர்களை தங்களிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்த குளியல் அறைக்குள் அடைத்தனர்.

பின்னர் அங்கிருந்த நகைகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரிக்கும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு கார் ஒன்றில் அவர்கள் தப்பி சென்றனர்.

குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிபடைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருவதாக, சைபராபாத் நகர போலீஸ் ஆணையர் சந்தீப் சாண்டில்யா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.