இந்தியா

இந்திய அணுசக்தி வல்லமை எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல: மத்திய அரசு

இந்தியா தனது அணுசக்தித் திறனை வலுப்படுத்துவது, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கும் எதிரான செயல் அல்ல என்று மத்திய அரசு

PTI

புது தில்லி: இந்தியா தனது அணுசக்தித் திறனை வலுப்படுத்துவது, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கும் எதிரான செயல் அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் "அக்னி-5' ஏவுகணையை இந்தியா திங்கள்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இந்தச் சோதனையை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விதிகளுக்கு உள்பட்டு இந்தியா நடத்தியிருக்கும் என தாம் நம்புவதாக சீனா தெரிவித்திருந்தது. எனினும், சீனாவைக் குறிவைத்தே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சில ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அணுசக்தித் திறனை இந்தியா வலுப்படுத்துவது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைத்து, அந்த நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல; அனைத்து சர்வதேச விதிகளையும் பின்பற்றியே இந்தியா செயல்படுகிறது. இதேபோன்றே மற்ற நாடுகளும் செயல்படும் என்று இந்தியா நம்புகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT