இந்தியா

சமாஜ்வாதி  கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்!

சமாஜ்வாதி  கட்சியில் இருந்து உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் 'திடீர்' அறிவிப்பு செய்துள்ளார்.

DIN

கான்பூர்: சமாஜ்வாதி  கட்சியில் இருந்து உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் 'திடீர்' அறிவிப்பு செய்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி  கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக நேற்று கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு போட்டியாக அகிலேஷ் 35 பேர் கொண்ட தனிபட்டியல்  ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது.

இந்நிலையில் முலாயம் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டதால். ஒழுங்கீன நடவடிக்கையாக அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT