இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இரண்டாவது வகை நீரழிவு நோய்க்கான ஆயுர்வேத மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.
பிஜிஆர்-34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனமும் லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனமான மருத்துவ மற்றும் வாசனைப் தாவரங்களளுக்கான மத்திய நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த மருந்தை கோழிக்கோட்டில் இன்று அறிமுகம் செய்துவைத்து முதன்மை விஞ்ஞானி ஏகேஎஸ் ரவாத் பேசியதாவது:
இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமானோர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரழிவு நோய்க்காக இதுவரை எவ்வித பயனுள்ள தீர்வும் காணப்படவில்லை.
மருத்துவ மற்றும் வாசனைப் தாவரங்களளுக்கான மத்திய நிறுவனம்,தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து இரண்டாம் வரை நீரழிவுக்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மருந்து பயனுள்ளது, பாதுப்பானது. மேலும், நோயை கட்டுப்படுத்துவதில் நோயாளிக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். தற்போதைய நீரழிவு நோய்க்கான மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் சிஎஸ்ஐஆர் அறிமுகப்படுத்தியுள்ள மருந்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு பக்கவிளைவுகளை குறைக்கும் என்றார்.
தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி வி.ராவ் கூறுகையில், இந்த மருந்து இன்சூலின் சுரப்பதை அதிகரிக்கும் என்றார்.
இந்த புதிய மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவதற்கு ஏஐஎம்ஐஎல் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.