மும்பை தாக்குதலுக்காக தாஜ் ஹோட்டல் மாதிரியை தயாரித்த தீவிரவாதிகள்
மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக தாஜ் ஹோட்டல் போன்ற மாதிரியை தயாரித்ததாக, டேவிட் ஹெட்லி கூறினார்.
மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக தாஜ் ஹோட்டல் போன்ற மாதிரியை தயாரித்ததாக, டேவிட் ஹெட்லி கூறினார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்கரான ஹெட்லி, அமெரிக்க சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார்.
அவர் இரண்டாவது நாளாக அளித்த வாக்கமூலம் விவரம்:
Advertisement
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாகிஸ்தானின் முஷாராபாத் நகரில் நடைபெற்ற லஷ்கர்-ஏ-தொய்பா கூட்டத்தின் போது மும்பையில் தாக்குதல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஷாஜித் மிர், அபு கஃபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மும்பை தாஜ் ஹோட்டல் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு எனக்கு உத்தரவிடப்பட்டது.
தாஜ் ஹோட்டலில் நடைபெறவிருந்த இந்திய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் கூட்டத்தின் போது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், அக்கூட்டம் நடைபெறவில்லை. இதற்காக அவர்கள் தாஜ் ஹோட்டல் மாதிரியை செய்து வைத்திருந்த்தனர்.
லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தில் இணைந்த பிறகு முதன்முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மும்பை வந்தேன். அப்போது பல இடங்கள் குறித்த புகைப்படங்களையும், விடியோக்களையும் பதிவு செய்தேன்.
பின்னர், 2008 ஆம் ஆண்டு மும்பை வந்த நான், தாஜ் ஹோட்டல், கடற்படை தளம், மகாராஷ்டி மாநில போலீஸ் தலைமையகம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் ஆகிய இடங்களை விடியோ எடுத்தேன். ஜிபிஎஸ் கருவி மூலம் நான் சென்ற இடங்கள் அனைத்தையும் துல்லியமாக பதிவு செய்தேன்.
பின்னர் பாகிஸ்தான் திரும்பிய நான், அனைத்து தகவல்களையும் ஷாஜித் மிர், அபு கஃபா ஆகியோரிடம் அளித்தேன் என்றார் ஹெட்லி.