இந்தியா

உ.பி. சிறைக் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: சந்திப்புக்கு இனி தடுப்பு வலை இல்லை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகள், தங்களது உறவினர்க சந்திக்கும் போது அவர்களுக்கு இடையே இருக்கும் தடுப்பு வலை முறை நீக்கப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் பல்வந்த் சிங் ரமூவாலியா கூறியுள்ளார்.

PTI

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகள், தங்களது உறவினர்க சந்திக்கும் போது அவர்களுக்கு இடையே இருக்கும் தடுப்பு வலை முறை நீக்கப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் பல்வந்த் சிங் ரமூவாலியா கூறியுள்ளார்.

காஸியாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரமூவாலியா கூறுகையில், 122 ஆண்டு காலமாக இருக்கும் தடுப்பு வலை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு,  சிறைக் கைதிகள் இனி தங்களது உறவினர்கள், நண்பர்களை நேரில் சந்தித்து ஒன்றாக அமர்ந்து பேசலாம் என்று தெரிவித்தார்.

தாஸ்னாவில் உள்ள மாவட்ட சிறைச் சாலையில், சிறைக் கைதிகள் முன் உரையாற்றிய ரமூவாலியா, சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தற்போது வாரத்துக்கு இரண்டு நாட்கள் என்பதை அதிகரிக்கவும் மாநில அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

இதன் மூலம், சிறைகளிலும், சிறைச்சாலைக்கு வருவோர் முறைகேடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படும் என்றும், சிறைக் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் அவ்வப்போது செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே போல மே 10ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட சிறைச் சாலைகளிலும்,  சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT