காஷ்மீரில் கடந்த சனிக்கிழமை, மிகுந்த பயற்சி பெற்ற தீவிரவாதிகளுடனான சண்டையின் போது வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஷங்கர் சந்திரபான் ஷிண்டே உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் நாஷிக்கில் உள்ள பாயல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஷங்கர் சந்திரபான் ஷிண்டேவின் இறுதிச் சடங்குகள் இன்று முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஸுன்ரேஷி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் சந்திரபாணியுடன் சேர்த்து இரண்டு வீரர்கள் பலியாகினர்.
வீர மரணம் அடைந்த ஷிண்டே கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், ஆறரை வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.
இவர், கடந்த 2012ம் ஆண்டு தெற்கு சூடானில் நடைபெற்ற அமைதிக் காப்புக் குழுவில் இந்திய தரப்பில் சென்று பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.