இந்தியா

ஜேஎன்யு விவகாரம்: பாட்டியாலா நீதிமன்றத்துக்குள் வெளிநபர்கள் நுழைய தடை

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதால், பாட்டியாலா நீதிமன்றத்தில் வெளிநபர்கள் நுழைய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

PTI

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதால், பாட்டியாலா நீதிமன்றத்தில் வெளிநபர்கள் நுழைய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அப்சல் குரு நினைவு தினத்தை அனுசரித்தனர். இதையடுத்து, மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமார் உட்பட 7 மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து, இன்று கன்னையா நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதை முன்னிட்டு, பாட்டியாலா நீதிமன்ற அறைக்குள், இரு தரப்பைச் சேர்ந்த 5 வழக்குரைஞர்கள், 5 பத்திரிகையாளர்கள், மாணவர் அமைப்பைச் சேர்ந்த இருவர், ஜேஎன்யு நிர்வாகத்தின் சார்பில் இருவர் மட்டுமே நுழைய அனுமதிக்க வேண்டும். வேறு வெளிநபர்கள் யாரும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT